தென் மாகாணத்தில் ஐந்து அநாதை இல்லங்களுக்கு பூட்டு

Report Print Manju in சமூகம்

கடந்த 4 வருடங்களில் தென் மாகாணத்தில் ஐந்து அநாதை இல்லங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் மாகாணத்தில் இல்லங்களில் தஞ்சமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதால் இந்த சிறுவர் இல்லங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை ஆணையாளர் மகேஷ் ராஜித கருணநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டளவில் தென் மாகாணத்தில் 29 சிறுவர் இல்லங்கள் இருந்தன. அவறிறில் 1560 குழந்தைகள் இருந்தனர். தற்போது தென் மாகாணத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 856 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சுமார் 500 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகளுக்கு மாதாந்த உதவித்தொகையாக 1000 ரூபா வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.