கொழும்பு கடற்கரையில் நடந்த மோசமான களியாட்டம்! இளம் யுவதிகள் உட்பட பலர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியின் கடற்கரையில் நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 30 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ ஹோட்டலுக்கு பின்னால் நடத்தப்பட்ட கடற்கரை விருந்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 25 இளைஞர்களும் 5 யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸார் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து புதிய வகை போதைப்பொருள், கஞ்சா, சட்டவிரோத புகையிலை போன்றவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக 2500 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளது.

களியாட்ட விருந்தில் நுழைந்ததன் பின்னர் பல்வேறு போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் முகமூடி அணிந்து கொண்டு, களியாட்ட விருந்தில் கலந்து கொண்டு, சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில், 15 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.