தொடர் போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்: அரசியல் கட்சிகள் மீது அதிருப்தி

Report Print Mohan Mohan in சமூகம்

தமது நிலமீட்பு போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என கேப்பாபுலவு பகுதியில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

படையினர் வசம் இருக்கும் தமது சொந்த நிலங்களை மீட்டுத்தருமாறுகோரி 539ஆவது நாளாகவும் கேப்பாபுலவு பகுதியில் இன்றைய தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் எமது சொந்த நிலங்களையே திருப்பித்தருமாறு கேட்கின்றோம். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாங்கள் பெரிதும் நம்பியிருந்தோம்.

ஆனால் இதுவரை எமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை மாறாக இராணுவத்தினர் எமது பூர்விக நிலங்களில் புதிய கட்டடங்களை நிர்மானித்து இராணுவ முகாமை பலப்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடப்போவதில்லை எமது சொந்த நிலங்களை மீட்கும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.