கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலும், பாதுகாப்பு தொடர்பான கமராக்கள் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அருள் குமரனின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சமூக, கல்வி அபிவிருத்திக்கான வலையமைப்பின் பங்கேற்றலுடன் அக்ரம் அமைப்பினரும் இணைந்து ஒரு தொகை சீ.சீ.டீவி கமராக்களை வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கிண்ணியா தள வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு மக்களின் ஒத்துழைப்பும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது என மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அருள்குமரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் கிண்ணியா தளவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பீ.சதீஸ் குமார், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் கயல்விழி உட்பட கிண்ணியா வலயக் கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெம்ஸீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.