வடக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், இரசாயனவியல் பாடங்கள் உட்பட ஏனைய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இந்தப் பாடங்களுக்கான ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விளம்பரப்படுத்தல் நடைபெறும். இந்தப் பாடங்களுக்காக வடக்கு மாகாணப் பாடசாலைகளில் 647 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன.
ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு முன்னரும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால், போதிய விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை. அவற்றுக்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.