பரீட்சை நிலையத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக முறைப்பாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பரீட்சை மேற்பார்வையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் மலையக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பரீட்சை திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சங்கர மணிவண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையின் பரீட்சை நிலையத்தில், பரீட்சை எழுதிய மாணவர்களே பாதிப்படைந்துள்ளனர். கடந்த 6ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உயர் தர பரீட்சை நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், பரீட்சை நேரத்தில் குறித்த நிலையத்தில் கடமையிலிருக்கும் மேற்பார்வையாளர் மாணவர்களை பரிசோதனை செய்வதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலையக ஆசிரியர் தொழிற்சங்கங்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளன. பரீட்சை நிலையத்திற்கு செல்லும் முன்னர் மாணவர்களை பரிசோதனைக்குட்படுத்தலாம்.

ஆனால் பரீட்சை எழுத்தும் போது மாணவர்களை பரிசோனைக்குட்படுத்துவது மாணவர்களை உள ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.