கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் அமைக்கப்படும் 40 கல்வெட்டுக்கள்

Report Print Yathu in சமூகம்

கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் அவசியமானதென இனங்காணப்பட்ட 40 இடங்களில் கல்வெட்டுக்களை அமைக்கும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச சபையின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிருஷ்ணபுரம், விநாயகபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கின்ற பகுதிக்கான கல்வெட்டுக்குரிய அடிக்கல் இன்றையதினம் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிருஷ்ணபுரம் , செல்வநகர் இணைக்கும் பாலம், கிருஷ்ணபுரம், அம்பாள்குளம் இணைப்புப்பாலம் ஆகியவற்றுக்கான வேலைத்திட்டங்களும் இப்பிரதேசத்தில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 08 லட்சம் ரூபா பெறுமதியில் வடிவமைக்கப்பட்ட 40 கல்வெட்டுக்கள் இவ்வாறு கரைச்சி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், குறித்த நிகழ்வின்போது, கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.