ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் எதிர்நோக்கியுள்ள அசௌகரிங்களை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெள்ளம் காரணமாக கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 26ம் திகதி வரையில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொச்சின் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வருவதற்காக அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுள்ள பயணிகள் தென்னிந்தியாவில், ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்தில் இருந்தும் தமது பயணங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது

இதற்காக மேலதிகமாக எந்தவொரு கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது.

அதேபோல், கொழும்பிலிருந்து கொச்சினுக்கு செல்ல அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள பயணிகளும், தென்னிந்தியாவின் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்திற்கும் பயணிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.