வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Report Print Thileepan Thileepan in சமூகம்
51Shares

வவுனியா - வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனுக்கு எதிரான 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணம் ஒன்று கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு ஆவணத்தை வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் சாந்தி ஜெயசேகராவிடம் கையளித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவிக்கையில்,

“இதற்கான நடவடிக்கையினை உடன் எடுப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இந்த முறைப்பாட்டின் பிரதிகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கணக்காய்வாளர் நாயகம் குணவர்தனவிடமும் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் கொண்ட கோவை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.