மதுபாவனை தொடர்பான கருத்தமர்வும் கலந்துரையாடலும்

Report Print Theesan in சமூகம்
27Shares

போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வது தொடர்பில், சமுர்த்தி பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வு வவுனியா, ஈஸ்வரிபுரம் கிராமத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

எங்களை ஏழையாக்கி, ஆண்களை பாலியல் பலவீனமடையச் செய்யும் போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்வோம் என்ற தொனிப்பொருளில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வளவாளராக பங்கெடுத்த மதுபானம் மற்றும் போதைப்பொருள் நிலைய மாவட்ட இணைப்பாளர் அருளானந்த் கருத்து தெரிவிக்கையில்,

கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான எண்ணப்பாடு மாறவேண்டும்.

உண்மையிலே உழைக்கின்ற பணத்தை திருடுகின்ற சாராயக் கம்பனிகளின் வியாபாரத் தந்திரங்களுக்கு ஏமாறாத புத்திசாலித்தனமான இளைஞர்கள் உருவாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர் மதுரதீபன் பங்கெடுத்ததுடன் 150இற்கும் மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் ஆர்வத்துடன் கிராமத்தில் மாற்றத்தை நிகழ்த்த தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் கூறியிருந்தனர்.