வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றோம்

Report Print Mohan Mohan in சமூகம்

நெடுங்கேணி, ஒழுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம். அதனைத் தொல்லியல் திணைக்களம் பறிக்க முற்படக்கூடாது என்று வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரியுள்ளது.

இதனை எதிர்த்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழர்களின் இருப்பு இன்று பல வழிகளில் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் கையகப்படுத்தப்பட்டும் வருகின்றது.

இந்த நிலை நீடிக்குமானால் அனைத்தையும் இழந்த சமூகமாக தமிழினம் மாறிவிடும். எம் இருப்புகளை நாமே காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கின்றோம், அதனால் இவற்றை எதிர்ப்பது காலத்தின் தேவை.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கும் எமது அந்தணர் ஒன்றியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனவே அதைக் காக்க வேண்டிய கடமை எமக்குண்டு.

அனைவரும் தங்கள் உணர்வுகளை இதில் வெளிப்படுத்தி எமது நிலங்களை நாங்கள் காப்பதற்கு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.