கொழும்பில் இளம் அரசியல் தலைவர் படுகொலை! உளவு பார்த்த நபர் கைது

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் நவோதயா கிருஷ்ணா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணாவை கொலை செய்வதற்காக உளவு பார்த்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அஞ்சன மிதுன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த மாதம் 9ம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா கொல்லப்பட்டிருந்தார்.

மோட்டார் சைகக்கிளில் சென்ற ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தி விட்டு தப்பி சென்றதுடன் சம்பவத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.