விஸ்வமடு பகுதியில் தீ பரவல்! பல மரங்கள் எரிந்து நாசம்

Report Print Suman Suman in சமூகம்

விஸ்வமடு - புன்னைனீராவிப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் வைத்த தீயினால் சுமார் 30க்கும் மேற்ப்பட்ட பனைமரங்கள் மற்றும் ஆறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

எனினும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பயந்தரும் மரங்கள் பல காப்பாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த தர்மபுரம் பொலிஸார் தீவைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.