கந்தளாயில் சட்டவிரோத மதுபானம் காய்ச்சிய இருவர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வடிசாராயம் காய்ச்சிய இருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த 52,மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் சீனி ஆலை பகுதியில் வடிசாராயம் காய்ச்சுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.