திடீர் சுற்றிவளைப்பின் போது 18 பேர் கைது

Report Print Evlina in சமூகம்

சிலாபம் பகுதியில் 4 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, கஞ்சா, மதுபானம் ஆகியவற்றை வைத்திருந்தமை மற்றும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.