திருகோணமலையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருவில பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 3 டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றிச் சென்றவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சேருவில, மண்டலபுர பகுதிகளை சேர்ந்த 32, 43 மற்றும் 28 வயதுகளையுடைய மூன்று பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக சேருவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் சேருநுவர கங்கை பகுதியிருந்து, கந்தளாய் மற்றும் அக்போபுர பகுதிக்கு மணலை ஏற்றி சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.