கொள்ளையில் ஈடுபடவிருந்த பொலிஸார் உட்பட 8 பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

பாணந்துறை பொலிஸ் பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபடவிருந்தமை தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் இன்று அதிகாலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசேட அதிரடிப்படையினரால் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 20 தோட்டாக்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.