மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரன் திடீர் மரணம்

Report Print Suman Suman in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரன் சந்திர ராஜபக்ஸ உயிரிழந்துள்ளார்.

சுகயீனமுற்றிருந்த இவர் கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 70 ஆவது வயதில் தங்காலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கோத்தபாய ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் சகோதரராவார்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் தனிப்பட்ட செயலாளராக சந்திர ராஜபக்ஸ பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.