வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி ஹீரோவான இலங்கை இளைஞன்! கடலில் மாயமான பரிதாபம்

Report Print Vethu Vethu in சமூகம்

நிலாவெலி கடலில் ஜெட் ஸ்கை படகில் ஏறி வெளிநாட்டு பெண்ணுடன் கடலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அவர் இதற்கு முன்னர் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் மொடல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.

பின்னர் அவர் கற்கை நடவடிக்கைக்காக நிலாவெலி கடலுக்கு சென்றுள்ளார். இறுதியாக அவர் அந்த பிரதேச கடல் பகுதியிலேயே காணாமல் போயுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் ஜெட் ஸ்கை படகில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த நிலையில், அந்த படகு கடலில் மூழ்கியுள்ளது..

எனினும் அவர் உயிர் பாதுகாப்பிற்காக அணிந்திருந்த ஜெக்கட்டை குறித்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பெண்ணிற்கு வழங்கியுள்ளார்.

இதனால் வெளிநாட்டு பெண் உயிரை காப்பாற்றியுள்ளார். பின்னர் காணாமல் போன்ற இளைஞர் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

பின்னர் சில நாட்களாக அவரை தேடு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers