காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணி பொது மக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பகுதியில் ஜே 234 கிரமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்த இராணுவமுகாம் முற்றாக அகற்றப்பட்டு, நான்கரை 4.5 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சி, காணிக்கான சான்றிதழ்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தார்.