நீதிமன்றத்தில் கைதிகளை படம்பிடித்த நபருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 4 நீதிமன்றத்தையும் சிறைக்கூண்டிலில் இருந்து சந்தேக நபர்களையும் செல்போன் வீடியோ கெமராவில் பதிவு செய்த நபரை புறக்கோட்டை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

வழக்கு விசாரணை நடைபெறும் போது, நீதிமன்ற சிறைக்கூண்டிற்கு அருகில் பொதுமக்கள் அமரும் ஆசனத்தின் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த இந்த நபர் மீது சந்தேகம் கொண்ட நீதிமன்றத்திற்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகஸ்தர் சந்தேகநபரை கைதுசெய்து, நீதிமன்ற பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகநபர், செல்போனின் கடவுச்சொல்லையும் பொலிஸாருக்கு முதலில் வழங்க மறுத்துள்ளார். இதனையத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் கடவுச்சொல்லை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.