வவுனியா கல்வியியல் கல்லூரி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில், கீழ் குறிப்பிடப்படும் ஆண்டுகளில் கல்வி கற்று வெளியேறியவர்களை, தொடர்புகொள்ளுமாறு வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு நிகழ்விற்கான ஒழுங்கமைப்பிற்காக (2012, 2014) (2013, 2015) (2014, 2016) ஆகிய ஆண்டுகளில் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் தங்களது முழுப்பெயர் ஆங்கிலத்தில் தற்போதைய முகவரி தொலைபேசி இலக்கம், பதிவிலக்கம் போன்ற விபரங்களுடன் முகவரியிட்ட கடித உறையுடன், பீடாதிபதி, க. சுவர்ண ராஜா, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி என்ற முகவரிக்குத் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.