தாபரிப்பு பணம் செலுத்த தவறிய நபருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை வெருகல் பகுதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரை இம்மாதம் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

மனைவியின் தம்பியை தாக்கிமை மற்றும் 52 ஆயிரம் ரூபாயினை தாபரிப்பு பணத்தினை செலுத்தாது இருந்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பூமரத்தடிச்சேனை, ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருமணம் முடித்து நான்கு பிள்ளைகளுக்கு மாதாந்தம் பதின்மூன்றாயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில் நான்கு மாதங்களாக 52 ஆயிரம் ரூபாயினை செலுத்தாது தலைமறைவாக இருந்ததோடு, மனைவியின் தம்பிக்கும் காயம் விளைவித்துள்ளதாகவும் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.