உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவிக்கு நடந்த பரிதாபம்: இருவர் கைது

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - உடையார் கட்டுப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் கலைப்பிரிவில் உயர் தர பரீட்சை எழுத சென்ற 19வயது மாணவி பாடசாலையில் பரீட்சை எழுதியபின் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வாகனம் ஒன்றில் வந்த குழுவினர் நேற்று முன்தினம் அவரை கடத்தி பளைப்பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் நிலைய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இருவரை இன்றைய தினம் பளைப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைதாகிய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.