திருகோணமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்! பெருமளவான காட்டுப்பகுதி எரிந்து நாசம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டம், கோமரன்கடவெல பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அனர்த்தம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தின் காரணமாக பெருமளவிலான மரங்கள் அழிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு அழிவடைந்துள்ள குறித்த பகுதி மீள் காடாக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.