யாழ். சுழிபுரம் சிறுமி ரெஜினா படுகொலை வழக்கின் இரு சாட்சியங்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

Report Print Evlina in சமூகம்

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா தொடர்பான வழக்கின் இரு சாட்சியங்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் இரண்டாம் சாட்சியமான 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் விசாரணை அதிகாரிகளையும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.