முல்லைத்தீவில் விபத்துக்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தகோரி கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கும் கரைதுறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை நேற்று கரைதுறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் க.விஜிந்தன் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில், முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை, முல்லைத்தீவு, கொக்கிளாய் போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக அதிவேகமாகவும் விதிமுறைகளை மீறியும் வாகனங்கள் செலுத்துவதினால் பல உயிர் இழப்புக்களையும், அங்க இழப்புக்களையும் விலைமதிப்பற்ற மனித இனம் எதிர்கொண்டு வருகின்றது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தங்கள் திணைக்களத்திடம் இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் கூடுகின்ற பகுதிகளில் வாகனங்கள் அதிவேகமாக செலுத்துவதை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்படுள்ளது.