5000 கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்துள்ள பொலிஸார்

Report Print Kamel Kamel in சமூகம்
26Shares

இலங்கை பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலகத் தடுப்புப் பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு மேலதிகமாக சுமார் 5000 கண்ணீர் புகைக் குண்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு மேலதிகமாக முகத்தை மூடக் கூடிய நவீன ரக தலைக்கவசங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் பொலிஸார் பயன்படுத்தப்படும் மரத்திலான பெட்டன்களுக்கு பதிலாக இறப்பர் பெட்டன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.