வெட்டுக்காயங்களுக்குள்ளான பாம்பிற்கு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் பாரிய காயங்களுக்கு உள்ளான மலைப் பாம்பிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புள்ளு வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பாரிய வெட்டு காயங்களுக்குள்ளான பாம்பிற்கே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின் பின்னர் ஹியாரே மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வருவதாக காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டபொல பிரதேசத்தில் புள்ளு வெட்டு இயந்திரத்தில் சிக்கிய பாம்பிற்கு வயிற்று பகுதியில் 3 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த பாம்பிற்கு 45 நிமிடங்கள் வரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்க அதிகாரி சிசிர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.