தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலமாக மீட்பு! காதலி எடுத்த விபரீத முடிவு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் சடலம் செட்டிக்குளத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று மதியம் ஒரு மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 24 வயதுடைய கிருஸ்ணபிள்னை தினேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காதலன் உயிரிழந்த தகவலையறிந்த காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவங்கள் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.