விமான நிலையத்தில் பெண்களின் ஆடையில் சிக்கிய மர்மம்! கொழும்பு பெண்கள் நால்வர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த 4 பெண்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க நகை கொண்டு வந்த விமான பயணிகள் நான்கு பேர் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிலியந்தலை, பத்தரமுல்லை, முல்லேரியா மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். இவர்கள் 61, 67, 53 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்று இந்தியாவின் மும்பை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெட் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான 9 W 255 ரக விமானத்தில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த பெண்கள் தாம் அணிந்திருந்த ஆடையில் யாருக்கும் தெரியாத வகையில் குறித்த நகைகளை மறைத்து கொண்டு சென்றுள்ளனர். எனினும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.