வடக்கு, கிழக்கில் மக்களுக்காக இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள்! வழங்கப்பட்டுள்ள உறுதி

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான புதிய தலைவர் லூக்காஸ் பெட்றிடிஸ், இலங்கையில் ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான புதிய தலைவர், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார்.

இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினரால் வடக்கு, கிழக்கில் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சுகாதார மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள், விவசாய உதவித் திட்டங்கள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான புதிய தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு இலங்கை இராணுவம் ஆதரவளிக்கும் என்றும் இராணுவத் தளபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.