கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பெண்கள்

Report Print Shalini in சமூகம்

சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த பெண்கள் நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சுங்கப் பிரிவினரால் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்களிடம் இருந்து 9,571,320 ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த பெண்கள் நால்வரும் சிங்கப்பூரிலிருந்து மும்பை ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தரமுல்ல, முல்லேரியா மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.