வாகன விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் படுகாயம்: பேருந்து சாரதி தப்பியோட்டம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் காருடன், பேருந்தொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் விபத்தில் பேருந்திற்கு சேதங்கள் ஏற்படவில்லையெனவும், சம்பவ இடத்திலிருந்து பேருந்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், விபத்தில் வீதியில் நின்ற இராணுவ வீரர் உட்பட இருவரே காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.