கிளிநொச்சியின் புதிய சந்தைக்கு 200 மில்லியன் நிதி விடுவிப்பு?

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி சேவைச் சந்தையில் உள்ள வர்த்தகர்களை தேங்காய் ,பழக்கடை மற்றும் புடவை வர்த்தகர்களை அழைத்து சந்தையினுடைய சுகாதார நிலைமைகள் அதனுடைய எதிர் கால திட்ட்ங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது

பிரதேச சபையினால் பொது சந்தையில் நிறைவேற்றப் படவேண்டிய செயற்பாடு குறித்தும் அவர்களுடைய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு வர்த்தகர்களால் குறிப்பிடப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உரிய அறிவுறுத்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

அது தவிர கிளிநொச்சிக்கு தரப்பட இருக்கின்ற 765 மில்லியன் ரூபாயிலான நவீன சந்தைதொகுதி தொடர்பாகவும் வர்த்தகர்கள் சிலரிடம் ஏற்பட்டிருக்க கூடிய மயக்கங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கிறது

இவ் விடையங்கள் கரைச்சி பிரதேச சபையில் கலந்துரையாடப்பட்டது

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் ,உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தை வர்த்தக சங்க தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்

செய்தி: யாது

இதுவரை எவ்வித நிதியும் விடுவிக்கப்படவில்லை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தை தொகுதி அமைப்பதற்கு முதற்கட்டமாக இருநூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் சந்தை தொகுதி அமைப்பதற்கு இதுவரை எவ்வித நிதியும் விடுவிக்கப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ் விடயம் குறித்து தெரியவருவதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய மாடி சந்தைக் கட்டட தொகுதி அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு இதன் முதற்கட்டமாக இவ் வருடம் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் சந்தை வர்த்தகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவாறு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் சந்தை வர்த்தகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அங்கு தவிசாளர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சேவை சந்தைக்கு மூன்று மாடிகளை கொண்ட புதிய சந்தை கட்டடிடத் தொகுதி அமைப்பதற்கு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அமைப்பதற்கு இவ்வருடம் இருநூறு மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மூன்று கட்டங்களாக நிதிவிடுவிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கான எவ்வித நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை, ஆனால் அற்கான அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது.

எனத் தெரிவித்த அவர் குறித்த சந்தைக்கான நிதி பெரும் நிதி என்பதனால் அவை மாவட்டச் செயலகத்திற்கு வழங்கப்படாது எனவும் அமைச்சுக்கே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செய்தி: நிபோஜன்