பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தின்ம கழிவகற்றல் நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவு

Report Print Dias Dias in சமூகம்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் திண்மக் கழிவகற்றலில் நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் நிலவி வந்த திண்மக் கழிவகற்றல் முகாமையின் குறைபாடுகளை பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் இனம் கண்டுள்ளார்.

இந்த நிலையில், சபையின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் “ஒழுங்கமைந்த கழிவகற்றல் முகாமையை உறுதிப்படுத்தல்” என்ற அடிப்படையில் 1.5 மில்லியன் ரூபா பிரதேச சபை நிதியிலிருந்து சுற்றுமதில் அமைத்தல் வேலைகளை அண்மையில் ஆரம்பித்திருந்தார் என கூறப்படுகின்றது.

இதன்மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் திண்மக் கழிவகற்றலில் நீண்ட காலமாக நிலவிவந்த பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு காணப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளியின் கழிவுகளை கொட்டும் இந்த இடம் மிக நீண்டகாலமாக சுற்றுமதில் எதுவுமின்றியும் ,பாதுகாப்பற்றதாகவும் இங்கு கொட்டப்படும் கழிவுகளை கால்நடைகள் உட்கொள்வதாகவும் கால்நடைகள் இறப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான மக்கள் முறைப்பாடுகளை பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தி இந்த விடயம் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவு பெற்றுள்ளது.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை சபை தவிசாளர் மற்றும் உபதவிசாளர் ,உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.