மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! யாழில் சோகம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல சிசுவின் தாயார் குறித்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுக் காலை தாயார் குழந்தையை எழுப்பிய போது குழந்தை எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.