டொலர் ஒன்றின் விற்பனை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டொலர் ஒன்றின் விற்பனை விலை 160.30 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை 162.11 ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில், இன்றைய மத்திய வங்கியின் தகவலின்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 159.10 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 162 ஆக கடந்த வெள்ளிக்கிழமை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.