பிரபல பாடசாலையை இலக்கு வைத்து செய்யப்பட்ட மோசமான காரியம்

Report Print Steephen Steephen in சமூகம்

பாடசாலை மாணவர்களுக்கும், யுவதி ஒருவருக்கும் கஞ்சா கலந்த போதை உருண்டைகளை (மதன மோதகம்) விற்பனை செய்த ஆயுர்வேத மூலிகை மருந்து கடையின் ஊழியரை மதுவரி திணைக்கள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை நகரில் உள்ள ஆயுர்வேத மூலிகை மருந்து கடையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்த 400 போதை உருண்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

ஹொரணை நகரில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஆயுர்வேத மூலிகை மருந்து கடையில் கஞ்சா கலந்த போதை உருண்டைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவரி திணைக்களத்தின் ஹொரணை பிரிவின் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாடசாலை மாணவனை போல் ஒற்றர் ஒருவரை அனுப்பி, போதை உருண்டை கொள்வனவு செய்வது போன்று நடிக்க வைத்து, அதிகாரிகள் இந்த முற்றுகையை நடத்தியுள்ளனர்.

Latest Offers