குட்டி யாழ்ப்பாணமான வெள்ளவத்தை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் வெள்ளவத்தையில் ஒரே இரவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த நாள் காலை வரையான காலப்பகுதியில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வீடுகளிலும் அலுவலகம் ஒன்றிலும் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளவத்தை மாயா மாவத்தையிலுள்ள தனியார் அலுவலகம் ஒன்றில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடபட்டுள்ளன.

அலுவலகம் மாலை வேளையில் பூட்டப்பட்ட நிலையில் அடுத்த நாள் காலையில் திறக்கும் போது, கொள்ளையிடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேபோன்று இரு வீடுகளுக்குள் புகுந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே இரவில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவங்களினால் வெள்ளவத்தை வாழ் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Latest Offers