குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை விநியோகித்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி வந்ததாக கூறப்படும் ஒருவர் ராகமை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் கணேமுல்ல - சுமேதா மாவத்தை பகுதியில் வசித்து வந்த 39 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் கம்பஹா நகரில் கார் ஒன்றில் ரி 56 ரக துப்பாக்கிகள் மூன்று, 7 மெசீன்கள் மற்றும் 168 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Latest Offers