யாழ்ப்பாணத்தின் துயர் நான் உணர்ந்தேன்: பதவி விலகும் தறுவாயில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

எகனமிஸ்ட் என்ற சஞ்சிகை ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அந்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்”, யாழ்ப்பாணத்தில் பல தசாப்தங்களிற்கு முன்னர் படையினரிடம் தங்கள் நிலங்களை பறிகொடுத்த மக்கள் மிகவும் அடிப்படையான மற்றும் மோசமான நிலைமைகளின் கீழ் வாழ்கின்றனர்.

அரசாங்கம் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களை விடுவிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் இருந்தாலும் படைத்தரப்பு அரசாங்கத்திற்கு அடிபணிய மறுக்கின்றது.

இதன் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் படையினரால் ரோகிங்யா இனத்தவர்கள் பாரிய படுகொலைகளை செய்யப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையாளர் சீனா அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதையும், வழமைக்கு மாறாக அமெரிக்க ஜனாதிபதி ரோகிங்யா இனத்தவர்கள் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையிலும் கூட கருத்து தெரிவிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் சுட்டிக் காட்டியுள்ளார்.

Latest Offers