ஐ.நா நோக்கி விரையும் மன்னார் மனித புதைகுழி விவகாரம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான விசாரணைகளை சர்வதேச ஆய்வாளர்களைக் கொண்டு முன்னெடுக்குமாறு வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இதுத் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை நிறுத்துமாறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கூறியுள்ளார் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதப் புதை குழியிலிருந்து 100 மனித எலும்புத் துண்டுகள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers