திருமணத்தில் சர்ச்சைக்குள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்! அலரி மாளிகையில் நடந்தது என்ன?

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்லோ மெத்யூஸின் திருமணம் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் சர்ச்சையான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த மஹிந்த ஆட்சியின்போது மெத்தியூஸின் திருமண நிகழ்வு, அலரி மாளிகையில் நடந்துள்ளதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் அதற்காக பணம் செலுத்தவில்லை என ஆளும் கட்சிக்கு ஆதரவான சமூக வலைத்தளங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் திருமணத்தின் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர்.

இதன் மூலம் பொது சொத்து சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருடர்களை பிடிப்பதில் திறமையான பிரதி அமைச்சரின் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அஞ்சலோ மெத்தியூஸ் திருமணத்தின் போது கையொப்பம் இடும் நிகழ்வு மாத்திரம் இடம்பெற்றதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் மாலை தேவாலயத்தில் பூஜைகளை நடத்தியதாகவும், பின்னர் கொழும்பின் பிரபல ஹோட்டலில் விருந்துபசாரங்களை நடத்தியதாகவும் மஹிந்த தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Latest Offers