வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
36Shares

கடுமையாக சேதமடைந்துள்ள உடபுஸ்ஸலாவ டெல்மார், கல்கடபத்தனை வீதியை சீரமைத்து தருமாரு கோரி இன்று டெல்மார் பகுதியில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று மதியம் நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியை மறித்து அப்பகுதியை சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் டெல்மார் பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

டெல்மார் முதல் கல்கடபத்தனை ஊடாக சூரியகஹபத்தனை வரை செல்லும் இந்த வீதியை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் 2017ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், புனரமைப்புக்காக பயன்படுத்தப்பட்ட கொங்கீரீட் கம்பிகளையும், கொங்கிரீட் போடுவதற்கு பயன்பட்ட வாகனத்தையும் ஒப்பந்தகாரர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது இந்த வீதியூடாக போக்குவரத்தை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த வீதியின் புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பிக்குமாறு வீதி அதிகார சபையின் அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து, உடபுஸ்ஸலாவ பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.