நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படவுள்ள 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள்

Report Print Kamel Kamel in சமூகம்

சுனாமி முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நாளையதினம் செயற்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து கோபுரங்களும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் செயற்படுத்தப்பட உள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகையில் உலகின் 28 நாடுகள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 8.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரையில் இந்த ஒத்திகை இலங்கையில் நடைபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers