யாழில் காலை வேளையில் ஏற்பட்ட விபரீதம் - ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் இன்று காலை ஆறு மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

வேன் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதிக்கொண்டமையினால் அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தம் காரணமாக சரசாலையை சேர்ந்த 55 வயதுடைய க. விக்னேஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த மு.சிவசங்கர் என்பவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி, சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Latest Offers