ஒட்டுசுட்டான் புலிக்கொடி விவகாரம்: 12 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு

Report Print Yathu in சமூகம்

ஒட்டுசுட்டான் பகுதியில் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

துணுக்காய், கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் முதலில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

விசாரணையின் பின்னர் கடந்த மாதம் 29.08.18 அன்று சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் 12 பேரும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ந.சுதர்சன் முன்னிலையில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, 12 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.