கிளிநொச்சி கோர விபத்தில் மூவரின் நிலை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - முரசு மோட்டை ஏ 35 வீதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளொன்று, விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் தர்மபுரம் வைத்தியசாலையிலும், ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers