திருகோணமலையில் சந்தேகநபர்கள் இருவர் கஞ்சாவுடன் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியின், யான் ஓயா பாலத்தடியில் வைத்து 3 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களில் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்தவர் அங்கவீனர் எனவும், அவர் கை பிடியை கையில் வைத்துக் கொண்டு கஞ்சாவை பின் புறமாக பையில் வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest Offers